-வேண்டும் என வந்த நீ-

Author வை.கே.ராஜூ - -
Home » -வேண்டும் என வந்த நீ-

விண்ணைத்தாண்டி இன்று
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?



பூஞ்சோலைக் காற்று
புழுதியைக் கிழப்பியதாய்
கண் திறந்து காத்திருக்க
மண்தூவிச் செல்கின்றாயே..!

வேண்டும் என வந்த நீ
வேண்டாம் எனச் செல்வதென்ன..?
சுழிக்காற்றாய் நீயும்
முகம் சுழித்துப் போவதென்ன..?