-உலராத முத்தம்-

Author வை.கே.ராஜூ - -
Home » -உலராத முத்தம்-

சாய உதட்டில்
காயமூட்டி
சூடான இதழில்
குளிர் பாச்சி



இணைந்து கொண்ட முத்தங்கள்...
ஆசைகள் கூடி
மூடிய கண்கள்
கோடான கோடி
ஞாபகங்கள் தாண்டி
உதடுகள் விரித்து
வாங்கிய மூச்சி
உயிரின் சலனத்தை
உலுப்பியே போச்சி...
மகிழ்ந்து நின்ற உதடுகளே..!
மனமாறாக் கனவுகளே..!
உலராத முத்தங்களாய்
உள்ளங்கள் கொளுங்கள்.